துப்பாக்கியில் நடிகர் விஜய்; லியோவின் இசை வெளியீட்டு விழா பற்றிய தகவல் கசிந்தது!

0
44

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் “லியோ” திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி இணையத்தினை ஆக்கிரமித்து வருகின்றது. லியோ திரைப்படத்தின் இசை வெளியீடு விழா எதிர்வரும் 30ம் திகதி நடக்கவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

கடந்த சில வாரங்களாக மலேசியா, சென்னை, மதுரை, கோவை போன்ற பல இடங்களில் இந்தப் படத்தின் இசை வெளியீடு நடக்கவுள்ளதாகவும் மிகவும் பிரம்மாண்டமாக இந்த இசை வெளியீடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும் இந்த நிகழ்ச்சியில் விஜய்யின் பேனர்கள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குறிப்பிட்ட டிக்கெட்டுகள் வழங்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் படக்குழு மேற்கொண்டுள்ளது.

படம் வெளியாக ஒரு மாதம் உள்ள நிலையில் அடுத்தடுத்த அப்டேட்டுகளை படக்குழு வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. தற்போது சிறப்பான போஸ்டர் வெளியாகியுள்ளது.