திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையிலுள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி, அதற்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இது தொடர்பில் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு கடந்த பெப்ரவரி 27ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியது.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்
அதற்கமைய, கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.
எனினும், இந்த சட்டமூலத்தில் அடங்கியுள்ள சில சரத்துக்கள் தொடர்பில் பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அதனை திருத்தியமைக்க அரசாங்கம் தீர்மானித்தது.
அதன்படி பெறப்பட்ட ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களின் அடிப்படையில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.