வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு..

0
226

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும்(18) சீரற்ற காலநிலை நிலவுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை அல்லது இடியுடன் கூடிய மழை

இதற்கமைய, மேல் சபரகமுவ மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மாத்தறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நாட்டின் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகளவிலான மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.