ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பந்தமான சர்ச்சைக்குரிய வாத விவாதங்களுக்கு உள்ளான சோனிக் சோனி என்ற நபர் அப்போது அரச புலனாய்வு சேவையின் முஸ்லிம் பிரிவுக்கு பொறுப்பாக செயற்பட்டு வந்த பொலிஸ் பரிசோதகர் செனரத் பண்டார என ஜெனிவாவில் வசிக்கும் புலனாய்வு ஊடகவியலாளரான ஸ்ரீ லால் பிரியந்த தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் இருந்து இணையத்தள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார். சோனிக் சோனிக் என்ற இந்த செனரத் பண்டார என்ற அதிகாரி சஹ்ரான் குழுவுடன் மிக நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்தார்.

சோனிக் சோனி என்ற புனைப்பெயரில் அறியப்படும் பொலிஸ் பரிசோதகர் செனரத் பண்டாரவிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ள அப்போது ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்தி வந்த ஷானி அபேசேகர முயற்சித்தார்.
அப்போது அரச புலனாய்வு சேவையில் பணியாற்றிய பிரதிப் பொலிஸ் மா அதிபர், ஷானி அபேசேகரவை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு விசாரணை நடத்துவதை கைவிடுமாறு கூறினார் எனவும் ஸ்ரீ லால் பிரியந்த தகவல் வெளியிட்டுள்ளார்.