கைவிடப்பட்ட பயணப் பையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

0
214

கைவிடப்பட்ட பயணப் பையில் இருந்து சடலம் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். சீதுவ தண்டுகம ஓயாவிற்கு அருகில் பயணப் பையில் இருந்து சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாகவும் சடலமாக மீட்கப்பட்டவரின் விபரங்கள் உறுதி செய்யப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பொலிஸ் அதிகாரி ஒருவர் இளம் பெண்ணை படுகொலை செய்து பயணப் பொதியில் வைத்து கொழும்பில் கைவிட்டுச் சென்றிருந்தார்.

இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. எவ்வாறாயினும் கொலை செய்ததாக கூறப்படும் பொலிஸ் அதிகாரி தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் கொழும்பு பெஸ்டியன் மாவத்தையில் அமைந்துள்ள தனியார் பேருந்து நிலையத்திலும் பெண் ஒருவரின் சடலம் பயணப் பையில் வைக்கப்பட்டு கைவிடப்பட்டிருந்து.