கேரளாவை அச்சுறுத்தும் நிபா வைரஸ்; ஊரடங்கு அமுல்; அச்சத்தில் மக்கள்!

0
236

கேரளாவில் நிபா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில் அம்மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுமா? என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கேரள மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக நிபா வைரஸ் தீவிரமாகப் பரவி வருகின்றது. குறிப்பாக கோழிக்கோடு மாவட்டத்தில் 2 பேர் நிபா வைரஸினால் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் பலர் காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

10 நாட்களுக்கு ஊரடங்கு

இதனையடுத்து கோழிக்கோடு மாவட்டத்தில் எதிர்வரும் 10 நாட்களுக்கு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

kerala nipah virus

எவ்வாறு இருப்பினும் நிபா வைரஸ் பாதிப்பால் பொதுமக்கள் அச்சமும் பீதியும் அடைய வேண்டாம் என மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் சுகாதாரத்துறைக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அச்சுறுத்தும் நிபா வைரஸால் கேரளாவில் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். கிருமி நாசினி மூலம் கைகளை கழுவ வேண்டும் என்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.