ராஜாக்களின் அரிசி என அழைக்கப்படும் கருப்பு கவுனி அரிசியை ஒருகாலத்தில் ராஜாக்களும் ராஜகுடும்பத்தினரும் மாத்திரமே பயன்படுத்தி வந்தனர்.
அந்த அரிசியின் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள் குறித்து சாதாரண மக்களும் அறிந்துக்கொண்டு இதனை பயன்படுத்த ஆரம்பித்தவுடன் இந்த கருப்பு கவுனி அரிசியை தடை செய்தாக இந்த அரிசிக்கு வரலாறு உண்டு.
இதனால் இந்த அரிசிக்கு தடை செய்யப்பட்ட அரிசி என்ற பெயரும் உண்டு. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கு தேவையான புரதம், இரும்புச்சத்து என பல்வேறு சத்துக்கள் அதிகம் நிறைந்த இந்த கருப்பு கவுனி அரிசி உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவி செய்யும் இதன் மூலமாக பல்வேறு நோயிலிருந்தும் நம்மை பாதுகாக்க கூடியது.
மார்பக புற்றுநோயை கட்டுப்படுத்தும்
ஆண்டோசைனின் என்ற வேதிப்பொருள் அதிகம் இருப்பதால் இந்த அரிசி கருப்பு நிறத்தில் உள்ளது. கருப்பு கவுனி அரிசி புற்றுநோய் ஏற்படுத்தும் செல்களை கட்டுப்படுத்துகின்றது. பெண்களுக்கு ஏற்படக்கூடிய மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றல் இந்த கருப்பு கவுனி அரிசிக்கு உண்டு.
100 கிராம் கருப்பு கவுனி அரிசியில் 4.6 கிராம் நார் சத்து அடங்கியிருக்கிறது. நாம் சாப்பிடும் உணவு எளிதில் ஜீரணம் ஆவதற்கு நார்ச்சத்து மிகவும் அவசியமான ஒன்று செரிமானம் சார்ந்த பிரச்சினைகளால் அடிக்கடி அவதிப்படுகிறவர்கள் இந்த கருப்பு கவுனி அரசி சாப்பிட்டு வர எளிதில் குணமாகும்.
உடலில் இருக்கக்கூடிய மெட்டபாலிசத்தை சீராக பராமரிப்பதன் மூலம் ஆரோக்கியமாக இருப்பதற்கும் உதவி செய்யும்.
அரிசி வகைகளிலேயே மிக குறைந்த அளவு கார்போ ஹைட்ரேட் மிக அதிக அளவிலான நார் சத்து கொண்ட அரிசி கருப்பு கவுனி அரிசி.
இந்த அரிசியை தொடர்ந்து சாப்பிட்டுவர சர்க்கரை நோய் வருவது தடுக்கப்படும். உடலில் புதிய சிவப்பணுக்களின் உற்பத்திக்கு மிகவும் அவசியமான சத்து இரும்பு சத்து கருப்பு கவுனி அரிசியில் இரும்பு சத்து மிக அதிக அளவில் அடங்கியுள்ளது.
மன அழுத்தத்துக்கு மருந்தாகும்
100 கிராம் கருப்பு கவுனி அரிசியில் 2.2 கிராம் இரும்பு சத்து அடங்கியிருக்கிறது. அதிக உடல் எடையினால் அவதிப்படுகிறவர்கள் கருப்பு கவுனி அரிசி சாப்பிட்டு வர மிகவும் நல்லது. இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான நார்ச்சத்து மற்றும் கொழுப்பையும் கரைத்து வெளியேற்றும் இதன் மூலமாக உடல் எடையும் வேகமாக குறையும்.
மூளையில் இருக்கக்கூடிய கார்ட்டிசால் என்ற ஸ்ட்ரஸ் ஹார்மோன் கட்டுப்படுத்தும் இதன் மூலமாக மன அழுத்தமும் குறையும். மன அழுத்தம் மனசோர்வு ஆன்சைட்டி போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுகிறவர்கள் கருப்பு கவுனி அரிசியை சாப்பிட்டு வர மனதிலும் உடலிலும் புத்துணர்ச்சி ஏற்படும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவி செய்யும்
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கு தேவையான புரதம் இரும்பு சத்து என பல்வேறு சத்துக்கள் அதிகம் நிறைந்த அரிசி கருப்பு கவுனி அரிசி இது உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவி செய்யும் இதன் மூலமாக பல்வேறு நோயிலிருந்தும் நம்மை பாதுகாக்க கூடியது இந்த அரிசி.
மேலும் அலர்ஜி சார்ந்த பிரச்சனைகளால் அவதிப்படுகிறவர்களுக்கு மிக சிறந்த உணவு இந்த அரிசி.
உடலில் உள்ள இரசாயனக் கழிவுகளின் மாற்றமே உடலின் பல்வேறு விதமான அலர்ஜி உண்டாவதற்கு காரணம்.
உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்களை கட்டுப்படுத்தி உடலில் இருக்கக்கூடிய தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றும்.
குளூட்டன் அலர்ஜியினால் அவதிப்படுகிறவர்கள் தாராளமாக கருப்பு கவுனி அரிசி எடுத்துக் கொள்ளலாம் இது மிக சிறந்த பலனை கொடுக்கும்.