ஹொரணையில் உறங்கிக்கொண்டிருந்த சிறுமியொருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹொரணை – திகேனபுர பகுதியில் நேற்று பிற்பகல் இச் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப் பகுதியில் வசித்து வந்த சசுகி அனன்யா செசாந்தி என்ற நான்கு வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசியில் தகவல் தெரிவித்த தாய்
சிறுமி வழமை போன்று தனது தாயுடன் உறங்கிய நிலையில் சிறுநீர் கழித்தமையினால் அவருக்கு மாற்றுடை அணிவதற்காக தாய் சிறுமியை நித்திரையிலிருந்து விழிக்க செய்துள்ளார்.
எனினும் சிறுமி விழிக்காமல் நித்திரையில் காணப்பட்டதுடன் உடல் குளிர்மையடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதனை தொடர்ந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சிறுமியின் பிரேத பரிசோதனை இன்று ஹொரணை ஆதார வைத்தியசாலையில் மரண விசாரணை நீதிபதி சுசுமேதா குணவர்தன முன்னிலையில் நடைபெறவுள்ளது.
மேலும் ஹொரணை தலைமையக பொலிஸ் நிலையத்தின் பதில் கட்டளைத் தளபதி பிரதான பொலிஸ் பரிசோதகர் பராக்கிரம குணரத்னவின் பணிப்புரையின் பேரில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.