ஜிகர்தண்டா 2 படத்தின் டீசர் வெளியாகியுள்ளது

0
155

ஜிகர்தண்டா 2 திரைப்படத்தின் டீசரை நடிகர் மகேஷ் பாபு தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டா இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக உருவாகி வருகின்றது.

ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் டீசர் சற்று முன்னர் வெளியாகியுள்ளது.