ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைய வேண்டாம்; சஜித்துக்கு வேண்டுகோள்

0
206

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணையும் தீர்மானத்தை எடுக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்று ஐக்கிய மக்கள் சக்தி தகவல்கள் தெரிவித்துள்ளனர்.

ரணில் விக்ரமசிங்கவுடன் இணைவானது ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றியைத் தடுப்பதற்கான ரணிலின் சதி என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேவேளை கட்சிக்குள் இருந்து சிலர் ரணிலுடன் இணையுமாறு சஜித்துக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருந்தும் ரணிலுடன் இணைவதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டிலேயே சஜித் உள்ளார் என்று ஐக்கிய மக்கள் சக்தி வட்டாரம் கூறுகிறது.