இலங்கைக்கு பூரண ஆதரவை வழங்குவது தொடர்பில் ஐ.நா.வின் நிலைப்பாடு!

0
151

ஐக்கிய நாடுகள் சபையின் புதிதாக நியமனம் பெற்றுள்ள வதிவிடப் பிரதிநிதி மார்க் – ஆண்ட்ரே ஃப்ரான்ச் கடந்த இரண்டு வருடங்களில் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியிலிருந்து இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு பாராட்டு தெரிவித்ததுடன், அபிவிருத்திச் செயற்பாட்டிற்கான தொடர்ச்சியான ஆதரவை உறுதியளித்ததாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அலரிமாளிகையில் நேற்று முன்தினம் (01.09.2023) பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் மார்க்-ஆண்ட்ரே ஃப்ரான்ச் சந்திப்பில் ஈடுபட்டுள்ளார்.

இலங்கை சரியான திசையில் திரும்பிச் செல்வதாகத் தெரிவித்த அவர், உலகப் பொருளாதார வீழ்ச்சியினால் அடுத்த இரண்டு வருடங்கள் இலங்கைக்கு மாத்திரமன்றி பெரும்பாலான நாடுகளுக்கு மிகவும் கடினமான சூழ்நிலை நிலவக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைக்கு முழு ஆதரவையும் வழங்குவது குறித்து ஐ.நாவின் நிலை! | Un Assures Fullest Cooperation To Sri Lanka

இதன்போது பிரதமர் உணவு உற்பத்தியை அதிகரிக்கவும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டார். “நாங்கள் நீண்ட கால அடிப்படையில் ஏற்றுமதியை பல்வகைப்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம், உணவில் தன்னிறைவு பெறுவது மட்டுமல்லாமல், ஏற்றுமதி மூலம் அந்நிய செலாவணி வருவாயை அதிகரிக்கவும்” என்று அவர் கூறினார்.

இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஐநா பிரதிநிதியிடம் பிரதமர் விளக்கினார். மோதலின் போது கையகப்படுத்தப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கில் 95% க்கும் அதிகமான காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன, விவசாயிகள் தங்கள் நிலங்களில் விவசாயம் செய்யும் வகையில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டன, விடுதலைப் புலிகள் கைதிகள் விடுவிக்கப்பட்டனர் மற்றும் மீன்பிடி வாழ்வாதாரம் திரும்பியுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கைக்கு முழு ஆதரவையும் வழங்குவது குறித்து ஐ.நாவின் நிலை! | Un Assures Fullest Cooperation To Sri Lanka

பல தசாப்தங்களாக ஐ.நா அமைப்பில் சேவையாற்றிய இலங்கையர்களின் பெறுமதியான சேவைகளுக்கு ஐ.நா பிரதிநிதி பிராஞ்ச் இலங்கைக்கு நன்றி தெரிவித்தார்.

காணாமற்போனோர் அலுவலகம் மற்றும் ஏனைய நிறுவனங்கள் தமது பணிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், எஞ்சியுள்ள பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கு ஐக்கிய நாடுகளுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் வதிவிடப் பிரதிநிதி அதனை உயர் மட்டத்திற்கு கொண்டு செல்வார் என நம்பிக்கையினையும் தெரிவித்தார்