ஆசிய கோப்பை தொடர் 2023: பங்களாதேஷ் வீழ்த்தி இலங்கை வெற்றி!

0
338

2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண தொடரின் 2அவது போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

ஆசிய கிண்ண தொடரின் 2 வது போட்டியானது இன்றைய தினம் (31-08-2023) பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி தலைவர் ஷகிப் அல் ஹசன் முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.

இதனையடுத்து களம் இறங்கிய பங்களாதேஷ் அணி வீரர்களால், இலங்கை அணி பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பான முறையில் துடுப்பெடுத்தாட முடியவில்லை.

இதனால் பங்களாதேஷ் அணி 42.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 164 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

பங்களாதேஷ் அணி சார்பில் அதிகபட்சமாக நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ 89 ஓட்டங்களை பெற்றார். இலங்கை அணி சார்பில் மதீஷ பதிரன 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இதனையடுத்து 165 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி  முதல் 10 ஓவரின் 3 விக்கெட்களை இழந்து 43 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இந்த நிலையில் 4ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த சதீர சமரவிக்ரம

வும் சரித் அசலன்கவும் மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 78 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கையை நல்ல நிலையில் இட்ட போது 77 பந்துகளை எதிர்கொண்ட சதீர சமரவிக்ரம 6 பவுண்டறிகளுடன் 54 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

இதேவேளை, ஒரு புறம் நிதானமாக துடுப்பெடுத்தாடிய சரித் அசலன்க 92 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் அடங்கலாக ஆட்டம் இழக்காமல் 62 ஓட்டங்களைப் பெற்று இலங்கையின் வெற்றியை உறுதிசெய்தார்.

இலங்கை அணி 39 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 165 ஓட்டங்களைக் குவித்து வெற்றியீட்டியது.