“தெற்கிலிருந்து வரும் குரலுக்காக காத்திருங்கள்”…. முக ஸ்டாலின்

0
213

வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு Speaking for India என்ற தலைப்பில் Podcast ஒன்றை வெளியிடப்போவதாக முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தெற்கிலிருந்து வரும் இந்தக் குரலுக்காகக் காத்திருங்கள்   

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், உங்களில் ஒருவன் பதில்கள் என்ற வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள அவர் அதற்கு Awakening India’s Tomorrow, A Southern Voice Speaks for #INDIA! என Caption இட்டுள்ளார். அந்த ஆடியோவில், இந்தியாவுக்காக பேச வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம் என குறிப்பிட்டு, 2024ஆம் முடியப் போற பாஜக ஆட்சி இந்தியாவை எப்படி எல்லாம் உருக்குலைத்திருக்கிறது என்றும் எதிர்காலத்தில் நாம் கட்டமைக்க விரும்புகின்ற சமத்துவ சகோதரத்துவ இந்தியா எப்படி இருக்கும் என்று ஒரு ஆடியோ சீரியஸில் பேசப் போகிறேன் என தெரிவித்துள்ளார்.

அதற்கு ‘#Speaking for India ‘ என்ற தலைப்பு வச்சுக்கலாமா? தெற்கிலிருந்து வரும் இந்தக் குரலுக்காகக் காத்திருங்கள்” என்று பேசியிருக்கிறார். 

இது பற்றி திமுக அறிவாலயம் வெளியிட்டுள்ள பதிவில், சமூகநீதி, மதச்சார்பற்ற அரசியல், சமதர்மம், சமத்துவம், மாநில சுயாட்சி, கூட்டாட்சிக் கருத்தியல் ஆகியவை உள்ளதே இணையற்ற இந்தியா. ஒரே மதம், ஒரே மொழி, ஒரே உணவு, ஒரே பண்பாடு, ஒரே தேர்வு, ஒரே தேர்தல் உள்ளிட்டவையெல்லாம், பலவகைப்பட்ட மக்கள் வாழும் இந்தியாவை உருக்குலைக்கும் நச்சுக் கருத்துகள் என பதிவிடப்பட்டுள்ளது.

குமரி முதல் இமயம் வரையிலான பரந்து விரிந்த இந்திய நாட்டைக் காப்பாற்றும் கடமை நம் அனைவர் கைகளிலும் இருக்கிறது என்ற நோக்கோடு, பாரதிய ஜனதா கட்சி ஆட்சியின் அலங்கோலங்களை அம்பலப்படுத்தியும், பன்முகத்தன்மை கொண்ட, வலுவான மாநிலங்கள் கொண்ட, மதச்சார்பற்ற இந்தியாவைக் காப்பாற்றுவது குறித்தும், கழகத் தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க. ஸ்டாலின் அவர்கள், Podcast (குரல்பதிவுத் தொடர்) வடிவில், Speaking for India என்ற தலைப்பில் பேச இருக்கிறார். இத்தொடர் ஆங்கிலத்திலும், இந்தியாவின் பல்வேறு மாநில மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டும் வெளியாகவுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.