60 யானைகள் அணிவகுப்பு; 2000 நடனக் கலைஞர்கள் பங்குபற்றிய எசல பெரஹெரா ஊர்வலம் இன்று

0
244

செங்கடகல தலதா வருண 2023 இன் இறுதி ரந்தோலி பெரஹர இன்று (30) கோலாகலமாக ஆரம்பிக்கவுள்ளது. இன்று இரவு 07.00 மணிக்குப் பிறகு 03 நிமிடங்களுக்கு வரும் சுப வேளையில் ரந்தொலி பெரஹர இனிதே ஆரம்பமாகும்.

செங்கடகல பெரஹர திருவிழா என்பது இலங்கையின் கண்டி நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு பாரம்பரிய விழா. வரலாற்று சிறப்புமிக்க எசல பெரஹர திருவிழாவின் 1713 ஆவது பெரஹர இதுவாகும்.

Easala Perehara

1592 தொடக்கம் 1815 வரை மலையக இராசதானியாக விளங்கிய கண்டி இராசதானியின் அடையாளமாக தலதா மாளிகையில் கொண்டாடப்படும் எசல பெரஹர மிகவும் சிறப்பு வாய்ந்த ஓர் விழா ஆகும்.

வெலிவிட்ட சாரங்கர தேரர், செங்கடகல ஆலய பெரஹரவையும் தலதா பெரஹரவையும் இணைத்து ஒரே பெரஹராவை ஏற்பாடு செய்ததை அடுத்து தலதா பெரஹர ஆரம்பமானது.

Easala Perehara

Easala Perehara

எசல பிறை நாளில் தொடங்கும் எசல திருவிழாவில் மிகவும் பிரபலமானது நிகினி மாதத்தில் நடைபெறும் தேரோட்டம் ஆகும்.

மலையுச்சியில் இருந்து ஆரம்பமாகும் வரலாற்று சிறப்புமிக்க எசல பெரஹர திருவிழா, இலங்கையின் தனித்துவமான அடையாளமாக மாறியுள்ளது.

இந்த பெரஹர மஹா ரந்தோலியில் சிறப்பம்சமான யானைகளின் அணிவகுப்பில் பிரதானமாக கதிர்காம ஹஸ்தியா, களனியின் சிங்கராஜா மற்றும் கந்துலா தலதா அரண்மனையின் டெலே யானைகள் பங்கேற்கவுள்ளன.

இன்றைய பெரஹரவில் 60ற்கும் மேற்பட்ட யானைகளின் எண்ணிக்கை பங்கேற்கின்றமை விசேட அம்சமாகும்.

மேலும், 2000 கண்டி நடன கலைஞர்கள் பங்கேற்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இன்றைய பெரஹர தலதா தெரு, யட்டிநுவர தெரு, கந்தா தெரு, டி.எஸ். சேனநாயக்கா தெரு வழியாக சென்று, ராஜா தெரு வழியாக பயணம் செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Easala Perehara

நாளை காலை நான்கு பெரிய ஆலயங்களில் தெய்வ பூஜையும், கடுகலெ தெரு வழியாக கோதம்பை துறைமுகம் வரை சென்று நீர் வெட்டு திருவிழாவும் நடைபெறும்.

இதன்படி, நாளை (31) காலை நீர் வெட்டு திருவிழா இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீர் வெட்டு என்பது இலங்கையின் மிக நீளமான நதியாகக் கருதப்படும் மகாவலி ஆற்றில் நீர் எடுக்கும் ஒரு பண்டைய வழக்கம் எனவும் கூறப்படுகின்றது.

நதியை சுத்திகரித்து எடுக்கப்படும் குறித்த நீர், இலங்கை மக்களை ஆசீர்வதிப்பதற்காக நம்பி இந்த சடங்கு செய்யப்படுகிறது.

Easala Perehara

கண்டி பெரஹெரவின் இறுதி ஊர்வலத்திற்கு முந்தைய நாள் இந்த வைபவம் நடைபெறவுள்ளதுடன், தலதா மாளிகையின் பிரதான பாதுகாவலரான தியவடன நிலமேவாய உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் வழிபாடுகளை மேற்கொள்வார்கள்.

அலங்கரிக்கப்பட்ட யானைகள், தீ நடனம், சவுக்கடி நடனம், கண்டி நகர பாரம்பரிய நடனம் ஆகியவற்றுடன் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான கரகம், காவடி போன்றவற்றையும் பாரம்பரிய இசைக் கருவிகளான தவில், நாதஸ்வரம் போன்றவற்றின் சங்கமத்தினையும் இந்த பெரஹரவின் ஊர்வலத்தின் போது காணமுடியும்.

Easala Perehara