வாக்னர் கூலிப்படை தலைவர் உயிரிழப்பு ஆச்சரியம் இல்லை – ஜோ பைடன்

0
186

வாக்னர் கூலிப்படை குழுவின் தலைவர் விமானவிபத்தில் உயிரிழந்துள்ளார் என வெளியான தகவல்கள் குறித்து தான் ஆச்சரியமடையவில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

வாக்னர் தலைவரின் உயிரிழப்பு குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் அதிபர் புடின், புட்டினின் தொடர்பு இல்லாமல் ரஸ்யாவில் எதுவும் இடம்பெறுவதில்லை என பைடன் தெரிவித்துள்ளார்.

வாக்னர் கூலிப்படை தலைவர் உயிரிழப்பு ஆச்சர்யமில்லை | Death Leader Wagner Is Not Surprising Biden

வாக்னர் தலைவரின் விமானத்தை சுட்டுவீழ்த்திய ரஸ்யா

ரஸ்யாவில் இடம்பெற்ற விமானவிபத்தில் வாக்னர் கூலிப்படையின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாவதாக பிபிசி தெரிவித்துள்ளது.

ரஸ்ய விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் அதிலிருந்த பத்துபேரும் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. அதில் பயணம் செய்தவர்களில் வோக்னர் கூலிப்படையின் தலைவரின் பெயரும் உள்ளது என ரஸ்யாவின் உள்நாட்டு விமானப்போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை வாக்னர் தலைவரின் தனிப்பட்ட விமானத்தை ரஸ்யா சுட்டுவீழ்த்தியது என்ற தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ல்மை குறிப்பிடத்தக்கது.