இந்தியாவுடன் செய்த ஒப்பந்தங்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய முடியும் – அலி சப்ரி

0
154

ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்களை ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஒப்புதலுடன் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நேற்று சபையில் தெரிவித்தார்.

இலங்கையின் நலன்களுக்காக மாத்திரமே உடன்படிக்கைகள் கையெழுத்திடப்பட்டன. இந்த உடன்படிக்கைகள் மூலம் நாட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

இந்தியா தற்போது உலக பொருளாதாரத்தில் 5வது இடத்தில் உள்ளது. எதிர்காலத்தில் இந்தியா பொருளாதாரத்தில் இரண்டாவது இடத்தை நோக்கி முன்னேறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், இலங்கை இந்தியாவிடம் இருந்து பல பலன்களை பெற முடியும் எனவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்றி கூறியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே வெளிவிவகார அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.