9.8 பில்லியன் ரூபா செலவு குறைக்க புதிய திட்டம்

0
178

நாட்டில் தற்போதுள்ள சிறைக்கைதிகளை நிர்வகிப்பதற்கு வருடத்திற்கு 9.8 பில்லியன் ரூபா செலவாகின்றதாக நீதிமன்ற மற்றும் சிறைச்சாலை அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இது திறைசேரிக்கு பாரிய சுமையாகக் காணப்படுவதால் குற்றவாளிகளாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள 9000 கைதிகளை சமூகத் தேவைக்காக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் சிறைச்சாலைகளுக்குள் தொழிற்சாலைகளை அமைப்பதற்கான முறைமையை அறிமுகப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இவர்களால் ஏற்படக்கூடிய செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்காக வீட்டுக்காவல் தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.