சுகாதார ஆபத்து தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை!

0
144

நாடளாவிய ரீதியில் நிலவும் வரட்சி காரணமாக நீர் நிலைகள் மாசடைவதால் வயிற்றுப்போக்கு, வாந்தி பேதி போன்ற நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சுட்டாறிய நீரை பருகுவதன் மூலம் இந்நோய்களை தவிர்க்க முடியும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் சம்மில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,

கவனமாக இருங்கள்! மற்றொரு சுகாதார ஆபத்து தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை | Fever Effect In Sri Lanka Important Announcement

சுகாதார ஆபத்து

“இந்த வறண்ட பருவத்தில், சாதாரண நீர் நிலைகள் வறண்டு கிடப்பதால், தண்ணீர் விநியோகம் மக்களுக்கு கடுமையான பிரச்சினையாக உள்ளது.

குறிப்பாக கிராமப் பகுதிகள் மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்குச் செல்லும் போது இந்த நிலை தீவிரமான சூழ்நிலையாக மாறி வருகிறது.

கவனமாக இருங்கள்! மற்றொரு சுகாதார ஆபத்து தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை | Fever Effect In Sri Lanka Important Announcement

கிணறுகள், ஆழ் குழாய் கிணறுகள் போன்றவை வறண்டு கிடப்பதால், குடிநீர் கிடைக்காமல் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அதனால் கிடைக்கும் நீர் ஆதாரங்களில் இருந்து தண்ணீரை பெற முயற்சிக்கின்றனர். அந்த நீர் ஆதாரங்களில் சில அசுத்தங்கள் மற்றும் கிருமிகள் இருக்க வாய்ப்பு உள்ளது.

எனவே மக்கள் இந்த நீர் ஆதாரங்களில் இருந்து வரும் நீரை எதிர்காலத்தில் பயன்படுத்தும் போது வயிற்றுப்போக்கு, வாந்திபேதி போன்ற நோய்கள் உருவாகும் அபாயம் உள்ளது.

ஆகவே, நீங்கள் குடிக்கும் நீர் ஆதாரம் சுத்தமாக இல்லை என்பதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், குறைந்தபட்சம் தண்ணீரைக் கொதிக்க வைத்து குடிக்குமாறும் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.