குடிநீர் போத்தல்களில் மீண்டும் நீர் நிரப்புவது ஆபத்து!

0
181

இலங்கையில் சந்தையில் விற்பனை செய்யப்படும் குடிநீர் போத்தல்களில் மீண்டும் நீர் நிரப்புவது பொருத்தமானதல்ல என கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

குறித்த போத்தல்களில் கடுமையான சூரியஒளி படும்நிலையில் சில இரசாயனங்கள் தண்ணீரில் கலக்கப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சுத்தமான குடிநீர்

குடிநீர் போத்தல்களில் மீண்டும் நீர் நிரப்புவது ஆபத்து - மக்களுக்கு எச்சரிக்கை! | Danger Of Refilling Drinking Water Bottles Warning

இந்த நிலையில், பாடசாலை மாணவர்கள் முடிந்தவரை வீட்டில் இருந்து குடிநீரை எடுத்துச் செல்வதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறும் வைத்தியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட போத்தல்களில் மீண்டும் நீர் நிரப்புவதை தவிர்த்து, கண்ணாடி அல்லது தரமான போத்தல்களைப் பயன்படுத்துவது மிகவும் பொருத்தமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைகளில் ஆசிரியர்கள் இந்த விடயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும், மாணவர்களுக்கு போதுமானவரை சுத்தமான குடிநீரை வழங்குவதை உறுதி செய்வது மிகவும் அவசியமெனவும் லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர் ஜி.விஜேசூரிய வலியுறுத்தியுள்ளார்.