எலும்பியல் துறையில் ஒரு புதிய கண்டுபிடிப்பு!

0
153

மனித எலும்பு மாற்று அறுவை சிகிச்சையில் அத்தியாவசியப் பொருளுக்குப் பதிலாகப் பயன்படுத்தக்கூடிய மாட்டின் எலும்பினால் தயாரிக்கப்பட்ட Bone graft material ஒன்றை இலங்கையின் தொழில்முனைவோரும், ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல அரச பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் ஆய்வாளருமான பேராசிரியர் பிரசன்ன பிரேமதாச கண்டுபிடித்துள்ளார்.

பொதுவாக, எலும்பு ஒட்டுதலுக்குத் தேவைப்படும் இறக்குமதி மூலப்பொருட்கள் விலை அதிகம் என்பதுடன் பேராசிரியர் பிரசன்ன பிரேமதாசவின் இந்த புதிய கண்டுபிடிப்பு எலும்பியல் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த மாட்டின் எலும்புகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் எலும்பு ஒட்டு பொருள்களை மலிவு விலையில் உற்பத்தி செய்ய முடியும் என பேராசிரியர் சுட்டிக்காட்டினார்.

அதன்படி, நியூசிலாந்தின் ஒடாகோ பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இந்த மூலப்பொருட்களை எலும்புகளை பொருத்த பயன்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவித்த பேராசிரியர், தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்தவுடன் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் தெரிவித்தார்.