பாஸ்போட் அலுவலகத்தில் ஈவிரக்கமின்றி தக்கப்பட்ட புலம்பெயர் இளைஞர்; நடந்தது என்ன?

0
145

வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் வைத்து கடவுச் சீட்டு பெற வந்த புலம்பெயர் தமிழர் ஒருவர் மீது பொலிஸாரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

கடந்த புதன்கிழமை (2) இடம்பெற்றதாகக் கூறப்படும் தாக்குதல் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. மட்டக்களப்பில் இருந்து தமிழர்கள் மீது இவ்வாறான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

உத்தியோகத்தர்களுடன் முரண்பாடு

தனது கடவுச்சீட்டு புதுப்பிப்பதற்காக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த மட்டக்களப்பைச் சேர்ந்த புலம்பெயர் தமிழர் வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

இதன்போது தனக்கு பிறகு குடுத்தவர்களின் கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டதாக கூறிய அவர் தனது கடவுச் சீட்டு ஏன் இன்னும் வரவில்லை என உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டதுடன் அலுவலகத்தில் நின்ற பொலிசாரை தள்ளி கடமைக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து பொலிசார் மற்றும் கடவுச்சீட்டு உத்தியோகத்தர்கள் முன்னிலையில் மனிதாபிமானமற்று அவரை தாக்கி கை கட்டப்பட்டு நிலத்தில் வீழ்ந்து கிடக்கும் காட்சி பதிவாகியுள்ளது.

 இடம்பிடித்து கொடுக்கும் மாபியா

பொலிசார் தகாத வார்த்தைகளை பேசி குறித்த இளைஞனை தாக்கியுள்ளனர். அத்துடன் பொலிசாருக்கு சார்பாக குறித்த தாக்குதலை மேற்கொண்டவர்கள் குறித்த கடவுச் சீட்டு அலுவலகம் முன்பாக இடம்பிடித்து கடவுச் சீட்டை முன்னிலைப்படுத்தி பெற்றுக் கொடுக்கும் மாபியா கும்பலை சேர்ந்தவர் என அறிய முடிகிறது.

இதேவேளை அரச கடமைக்கு இனையூறு விளைவித்ததாக நபரை பொலிசார் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தி தற்போது விளக்கமறியலில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது