பாரியளவிலான அரச ஊழியர்களை வீட்டிற்கு அனுப்ப திட்டம்!

0
130

பாரியளவிலான அரச ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் திட்டம் முன்மொழியப்பட்டிருந்ததாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

எனினும் அந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மொனராகலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் வைத்து உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் நிதி நெருக்கடியால் இலங்கை பாரிய சர்வதேச பிரச்சினையை எதிர்கொண்டது. நெருக்கடியில் இருந்து மீள சர்வதேச ஆதரவும் நட்பும் தேவை. இதுபோன்ற நெருக்கடிகளை சந்தித்த நாடுகள் அவ்வளவு சீக்கிரம் தலை தூக்கவில்லை.

பாரியளவிலான அரச ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பும் திட்டம்! பிரதமர் வெளியிட்டுள்ள தகவல் | Government Worker Srilanka Pension Public Servant

உணவுப் பற்றாக்குறை

நான் சந்திக்கும் ஒவ்வொரு வெளிநாட்டு தலைவர்களும் நாங்கள் பெருமை கொள்கிறோம் என்று கூறுகிறார்கள். நம் நாட்டு விவசாயிகளை நினைத்து பெருமை கொள்கிறோம்.

உலகமே உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்ட போது, ​​நமது விவசாயிகள் பிரச்சினைகளை பொருட்படுத்தாமல் விவசாய நிலங்களுக்குச் சென்று நல்ல விளைச்சலைக் கொடுத்தனர். விவசாய நிலத்தின் குறைபாடுகளை களைந்து அதிக விளைச்சல் தருவது அவசியம்.

நிதி நெருக்கடியின் மத்தியில் இருந்த நிலைமைகளில் இருந்து இன்று இலங்கை சர்வதேசத்தின் நம்பிக்கையை வென்றெடுத்துள்ளது. பொருளாதாரத்தை மாற்றி எழுத முடிந்தது என்ற நம்பிக்கையில் தான் இருந்தது.

பாரியளவிலான அரச ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பும் திட்டம்! பிரதமர் வெளியிட்டுள்ள தகவல் | Government Worker Srilanka Pension Public Servant

சர்வதேச அளவில் வங்கி பரிவர்த்தனைகள் நின்றுவிட்டதை மறந்துவிடாதீர்கள். இப்படி ஒரு சர்வதேசப் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியிருப்பதை அனைவரும் புரிந்து கொள்வது கடினமாக இருந்தாலும், ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மாவட்ட அரசாங்க அதிபர்கள், மாகாண சபை அதிகாரிகள், உள்ளூராட்சி மன்ற அதிகாரிகள் உட்பட அனைத்து பொது சேவையாளர்களும் இதனை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

மக்களுக்கான நிவாரணம்

வெல்லஸ்ஸ பூமி எமது நாட்டின் சுதந்திரத்தின் எதிரொலியாகும். கடந்த காலத்தை நினைவுகூரும் இந்த மண்ணுக்கு நம் நாட்டின் ஒவ்வொரு அரசாங்கமும் கடன்பட்டிருக்கிறது. நாம் உணவில் தன்னிறைவு அடைந்தால், உணவு கொண்டு வர டொலர்களைப் பயன்படுத்துவதை நிறுத்த முடியும்.

பாரியளவிலான அரச ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பும் திட்டம்! பிரதமர் வெளியிட்டுள்ள தகவல் | Government Worker Srilanka Pension Public Servant

இப்பகுதிகளில் விவசாயம் செய்பவர்களுக்கு நிலம் ஒதுக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். இந்த நாட்டின் மிகக் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணத்தை நிறுத்த முடியாது. மோதலைத் தொடங்க இதுவே சிறந்த நேரம் என்று சிலர் நினைக்கலாம்.

மோதலை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை. மனிதாபிமானத்துடன் சிந்திக்க வேண்டும். நமது நாட்டின் மிகக் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு இந்த நிவாரணத்தை விரைவாக வழங்கவும், தொகையை அதிகரிக்கவும் இது ஒரு முயற்சியாக செய்யப்படுகிறது.

தற்போதுள்ள பிரச்சினைகளை தீர்த்து இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கான பொறுப்பை அரச அதிகாரிகள் என்ற வகையில் நிறைவேற்றுங்கள். ஏராளமான அரச ஊழியர்களை விடுவிக்கவும், நீக்கவும் பல்வேறு திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. நாங்கள் அதை செய்யவில்லை.

பாரியளவிலான அரச ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பும் திட்டம்! பிரதமர் வெளியிட்டுள்ள தகவல் | Government Worker Srilanka Pension Public Servant

இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டும். நாம் அனைவரும் கைகோர்த்து, நமது நம்பிக்கைக்குரிய கூட்டாளிகளைப் போல உள்நாட்டில் ஒரு திட்டத்தை நோக்கிச் சென்றால், உணவில் நாம் தன்னிறைவு அடையலாம் என குறிப்பிட்டுள்ளார்.