ரஷ்யாவில் கெபிர் (Kefir) என்னும் Maine Coon வகைப் பூனை ஒன்று தன் உயரத்தால் இணையத்தில் பிரபலமாகியுள்ளது.
யுலினா மினினா என்னும் பெண் வளர்க்கும் அந்தப் பூனை அவரின் 4 வயது மகளைப் போல் பெரியதாக இருக்கிறது. அந்தப் பூனையின் காணொளிகள் சமூக ஊடகத்தில் அதிகம் பார்வையிடப்படுகின்றன.
அத்துடன் இரு கால்களில் நிற்கும்போது பூனை தனது மகளின் உயரத்தை எட்டுவதாக பூனையின் உரிமையாளர் கூறியுள்ளார். உலகில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் ஆகப் பெரிய பூனை வகைகளில் Maine Coon வகையும் ஒன்று.
4 வயது வரை வளரக்கூடிய அவை பொதுவாக 3 அடி எட்டலாம் என கூறப்படும் அதேவேளை 3 வயது கெபிர் இன்னும் வளரலாம் என்றும் மினானா கூறினார்.