கடவுச்சீட்டு அலுவலகத்தில் ஈவிரக்கமின்றி தாக்கப்பட்ட இளைஞன்..

0
190

வவுனியா பாஸ்போட் அலுவலகத்தில் புலம்பெயர் தமிழ் இளைஞன் ஒருவன் அங்கிருந்த மாபியாக்கள் மற்றும் பொலிசாரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

தனது பாஸ்போட்டில் இருந்த சில தவறுகளை சீர்செய்வதற்காக அங்கு சென்ற குறித்த இளைஞன் பாஸ்போட் அலுவலர்களின் தவறினை சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் சினமடைந்த அலுவலர்கள் இளைஞரை பொலிசாரிடம் மாட்டிவிட்டதாகத் தெரியவருகின்றது.

ஈவிரக்கமின்றி தாக்குதல்

அத்துடன் காசு கொடுத்து பாஸ்போட் வாங்குபவர்களுடன் டீல் செய்யும் அங்குள்ள மாபியாக்களா பொலிசாரின் முன்னாலேயே குறித்த புலம்பெயர் இளைஞன் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளான்.

கடவுச்சீட்டு அலுவலகத்தில் ஈவிரக்கமின்றி தாக்கப்பட்ட புலம்பெயர் தமிழ் இளைஞன் | Diaspora Tamil Youth Assaulted At Passport Office

இளைஞன் மது போதையில் நின்று தகராறு செய்வதாக கூறியே தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த இளைஞன் எந்தத் தகராறும் செய்யாது தனக்கு இழைக்கப்பட்ட மற்றும் அங்கு வரிசையில் நிற்கும் அப்பாவிகளுக்கு இழைக்கப்படும் அநீதிளை எடுத்துக்கூறியதாக அங்கிருந்த மக்கள் கூறியுள்ளனர்.

கடவுச்சீட்டு அலுவலகத்தில் ஈவிரக்கமின்றி தாக்கப்பட்ட புலம்பெயர் தமிழ் இளைஞன் | Diaspora Tamil Youth Assaulted At Passport Office

அதேசமயம் வவுனியா பாஸ்போட் அலுவலகத்திற்கு பாஸ்போட் வாங்க வருபவர்களிடம் பொலிசாரின் ஆதரவுடன் அங்குள்ள மாபியாக்கள் ஆயிரக்கணக்கில் பணம் வசூலித்து பாஸ்போட் அலுவலர்களுடன் பகிர்ந்து கொள்வதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் பொலிஸாரின் கண் முன்னே அப்பாவி இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் அங்கிருந்த மக்களை சினம் கொள்ள வைத்துள்ளது.