இலங்கையில் பறிபோகும் அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் பதவி!

0
280

அமைச்சரவை கூட்டுப்பொறுப்பை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ரொஷான் ரணசிங்க Roshan Ranasinghe மீறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை (07-08-2023) தன்னை சந்தித்து விளக்கமளிக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அறிவித்தலை நேற்றைய தினம் (04-08-2023) ஜனாதிபதி அமைச்சருக்கு வழங்கியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கடந்த அமைச்சரவைக் கலந்துரையாடப்பட்ட விடயங்களை ஊடகங்களுக்கு பகிரங்மாக அறித்ததன் காரணமாகவே அமைச்சர் ரொஷான் ரணசிங்க மீது இவ்வாறு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் பறிபோகும் அமைச்சர் ஒருவரின் பதவி! வெளியான தகவல் | Minister Roshan Ranasinghe Post Ranil Take Away

இலங்கையில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலையை கருத்திற் கொண்டு நீர்த்தேக்கங்களில் இருந்து பயிர்ச்செய்கைக்காக நீரை விடுவதில்லை என எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் விவசாயியின் மகன் என்ற வகையில் தாம் அதிர்ச்சியடைவதாகவும், தண்ணீர் திறக்கப்படாததால், பல விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டு, இலட்சக்கணக்கான ரூபாய் நட்டம் ஏற்படுமெனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.