பிரதமர் கூட்டத்தில் சாணக்கியனின் செயல்!

0
180

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (04) பிரதமரின் வருகையை முன்னிட்டு நடந்த கூட்டத்தில் அதிதிகளின் ஆசனத்தை புறக்கணித்ததாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

அரசுசார்பில் செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் உரிமைகளை உதாசீனப்படுத்தும் விதத்தில் செயற்படுவதால் தான் இவ்வாறு நடந்துகொண்டதாகவும் அவர் கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கதிரையை புறக்கணித்த  சாணக்கியன்

அரசாங்கம் மற்றும் அரசுசார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள், அரசு சார்ந்து திரை மறைவில் செயல்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எமது மக்களின் உரிமை மற்றும் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை, அரசு சார்ந்தவர்களின் ஊழல்களை, மக்களுக்கான அநீதிகளை கண்டுகொள்ளாது உதாசீனப்படுத்தும் விதமாக நடந்து கொள்கின்றனர்.

அதன் காரணமாகவே அவர் நேற்றைய தினம் அரச அதிதிகளின் வரிசையில் அமராமல் மக்களோடு மக்களாக கூட்டத்தில் பங்குபற்றியிருந்தார். கூட்டத்தில் அரச சார் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊழல்கள் பற்றிய ஆவணத்தினையும் சாணக்கியன் பிரதமரிடம் சமர்ப்பித்திருந்தார்.

அதன்போது, பிரதமர் இவ் ஊழல்கள் தொடர்பான ஊழல் மோசடி விசாரணைக் குழு ஒன்றினை அமைப்பதாக உறுதியளித்திருந்தார்.

மேலும் ஊழல்கள் மக்களுக்கு எதிரான செயல்படும் எதிர்வரும் காலங்களில் நடவடிக்கை எடுக்கப்படாதவிடத்து இவர்களின் வருகைகளை ஒட்டி எமது மக்களுடன் ஒன்றிணைந்து எதிர்ப்பு போராட்டங்ள் முன்னெடுக்கப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கூறினார்.