கனடாவில் பெண் ஒருவர் 15 வயது சிறுமியாக மாறியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. மூன்று பிள்ளைகளின் தாயான பெண் ஒருவரே இவ்வாறு பதினைந்து வயது சிறுமிக்குரிய நினைவுகளை மட்டும் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண்ணின் வாழ்க்கை கதையை தற்பொழுது கலைப்படைப்பாக மாற்றுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்த கத்ரீனா ஓநெல் என்ற பெண் இந்த துரதிஷ்டவசமான நெருக்கடியை எதிர்நோக்கி உள்ளார். 7 ஆண்டுகளுக்கு முன்னதாக மாரடைப்பு காரணமாக 22 நிமிடங்கள் ஆக்சிசன் இன்றி அவதியுற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் மூன்று வாரங்கள் கோமா நிலையில் இருந்த குறித்த பெண் விழித்து எழுந்த போது தனக்கு 15 வயது என்ற ஓர் எண்ணத்தில் இருந்துள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தாயான குறித்த பின் தனது திருமண வாழ்க்கை பற்றியோ, பிள்ளைகள் பற்றியோ எந்த விதமான நினைவுகளையும் கொண்டிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவ உலகில் இவ்வாறான சம்பவங்கள் மிகவும் அரிதாக இடம்பெறுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அந்தப் பெண் தனது 15 வயது வரையிலான வாழ்க்கையை மட்டுமே நினைவில் கொண்டிருக்கிறார் என தெரிவிக்கப்படுகிறது. பிள்ளைகளையும் அவரினால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
பேஸ் போல் விளையாட்டில் ஈடுபட்டு இருந்தபோது திடீரென இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதன் பின்னரே இவ்வாறு கோமா நிலைக்குச் சென்று நினைவுகளை இழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பெண் கோமா நிலைக்கு சென்றபோது ஒன்று, ஏழு மற்றும் பத்து வயதான பிள்ளைகள் அவருக்கு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. உறவினர்கள் நண்பர்கள் போன்றவர்களுடன் வழமை போன்று பேச முடியவில்லை என அவர் வருத்தம் தெரிவிக்கின்றார்.