உணவுகள் நம் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. வெறும் வயிற்றில் நாம் சாப்பிடும் உணவுகள் பழங்கள் நட்ஸ்கள் மற்றும் விதைகள் உடலுக்கு பல அதிசயங்களை செய்கின்றன.
நம் முன்னோர்களும் அவர்களின் ஊட்டச்சத்து தேவைகள் மற்றும் பிரச்சனைகளுக்கு ஏற்ப வெறும் வயிற்றில் உணவுகளை சாப்பிட்டு வந்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு பழங்களும் நமக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கின்றன.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முதல் இதய ஆரோக்கியத்தை பராமரிப்பது வரை நமக்கு பல நன்மைகளை அளிக்கின்றன.
ஒரு நாளைக்கு ஓர் ஆப்பிள் சாப்பிடுவது உங்களை மருத்துவரை சந்திப்பதிலிருந்து விளக்கி வைக்கும் என்று கூறப்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
திராட்சைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிரம்பியுள்ளன.
அவை நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிக்கும்.
தினமும் 5 திராட்சைப்பழங்களுடன் நாளைத் தொடங்குவதன் மூலம் தொல்லை தரும் நோய் கிருமிகளை எதிர்த்துப் போராடி ஆரோக்கியமாக இருக்க உதவும்.
நோயெதிர்ப்பு சக்தியை பல மடங்கு அதிகரிக்க உதவும்.
செரிமானம்
திராட்சையில் உள்ள அதிக நீர் மற்றும் நார்ச்சத்து ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்க உதவும்.
அவற்றை வெறும் வயிற்றில் சாப்பிடுவது செரிமான நொதிகளைத் தூண்டி உணவின் முறிவுக்கு உதவுகிறது மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கிறது.
மேம்பட்ட செரிமானத்தை வழங்குகிறது.
ஆற்றல் அதிகரிப்பு
திராட்சைகளில் இயற்கையான சர்க்கரைகள் உள்ளன. அவை உடனடி ஆற்றல் ஊக்கத்தை அளிக்கின்றன.
காலையில் 5 திராட்சைப்பழங்களை உட்கொள்வதன் மூலம் அதிக ஆற்றலுடனும், வரவிருக்கும் நாளை உற்சாகமாக எடுத்துக்கொள்ளவும் தயாராக இருப்பீர்கள்.
இது ஆரோக்கியமான காலை உணவு நாளை ஆரோக்கியமானதாகவும் புத்துணர்ச்சியானதாகவும் மாற்றும்.
மேம்பட்ட மூளை செயல்பாடு குறிப்பாக அடர் நிறத்தில் இருக்கும் திராட்சைகளில் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சேர்மங்கள் நிறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
தினமும் காலையில் 5 திராட்சைகளை உட்கொள்வது நினைவாற்றல் மற்றும் செறிவு உள்ளிட்ட அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.
எடை இழப்புக்கு உதவுகிறது
திராட்சைகளில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால் அவை எடை மேலாண்மைக்கு சிறந்த தேர்வாக அமைகிறது.
இதனை காலைப் பழக்கத்தின் ஒரு பகுதியாக மாற்றுவதன் மூலம் நீண்ட நேரம் நிறைவாக உணருவீர்கள்.
நாள் முழுவதும் அதிகமாக சாப்பிடுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கலாம்.