இந்திய-இலங்கை தேசிய மின்சார இணைப்பு திட்டம்: இந்த வருடம் நிறைவடையவுள்ள அறிக்கை..

0
185

இந்திய-இலங்கைக்கு இடையிலான தேசிய மின்சார இணைப்பு திட்டம் குறித்த தொழில்நுட்ப அறிக்கை இந்த வருடம் செப்டெம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை அதிகாரிகள் குழு ஒன்று அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்து இரண்டு மின் கட்டங்களையும் இணைக்கும் திட்டத்தின் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து Power Grid Corporation of India Ltd (PGCIL) உடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

இதன்போது, இலங்கைக்கும் ஏனைய பிராந்திய நாடுகளான வங்காளதேசம், பூட்டான், இந்தியா மற்றும் நேபாளத்திற்னுமிடையில் இருதரப்பு மின்சார வர்த்தகத்தை மேற்கொள்ளும் வகையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அபிவிருத்தி செய்வதற்கும், இந்தியாவிற்கும் இலங்கைக்குமிடையில் உயர் திறன் கொண்ட மின்வலு இணைப்பு ஒன்றினை ஏற்படுத்துவதற்கும் ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன.

புதுப்பிக்கத்தக்க மின்சாரத் தேவை

இந்திய-இலங்கை தேசிய மின்சார இணைப்பு திட்டம்: செப்டம்பரில் நிறைவடையவுள்ள தொழில்நுட்ப அறிக்கை | Indo Lanka Grid Connection Technical Project

2030 ஆம் ஆண்டளவில் புதுப்பிக்கத்தக்க மின்சாரத் தேவையில் 70 சதவீதத்தை அடைய இலங்கை இலக்கு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த செயற்திட்டம் செலவைக் குறைப்பதொடு மட்டுமன்றி 2025ஆம் ஆண்டளவில் முதன்முதலாக வடக்கில் தனது செயற்திட்டத்தை நிறைவு செய்வதற்கு நிறுவனம் இணங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், இந்தியாவின் அதானி குழுமம் ஏற்கனவே இலங்கையின் எரிசக்தி துறையில் முதலீடுகளை இடுவதற்கு இணங்கியுள்ள நிலையில், தற்போது பூடான் போன்ற நாடுகள் இந்தியாவுடன் மின்சார வர்த்தகம் செய்ய முன்வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.