போர்க்குற்ற ஆதாரங்களை ICC இடம் கொடுங்கள்! புட்டினை சீண்டும் ஜோ பைடன்

0
173

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரேன்மீது ரஷ்யா நடத்தியதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களின் ஆதாரங்களை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்திடம் (ICC) பகிர்ந்து கொள்ளுமாறு தமது நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

எனினும் அதிபர் பைடனின் உத்தரவை அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு அதை ஏற்க மறுக்கிறது.

போர்க்குற்ற ஆதாரங்களை ICCஇடம் கொடுங்கள்! புடினை சீண்டும் ஜோபைடன் | Russia Give War Crimes Evidence To Icc Us Biden

அவ்வாறு செய்தால் வெளிநாடுகளில் உள்ள அமெரிக்கத் துருப்புகள்மீது அரசியல் ரீதியான வழக்குத் தொடுக்க அது வழியமைத்துவிடும் என்று அஞ்சப்படுகிறது.

அதேவேளை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினைக் கைது செய்யும்படி அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் இந்த ஆண்டு (2023) மார்ச் மாதம் ஆணை பிறப்பித்தது.

போர்க்குற்ற ஆதாரங்களை ICCஇடம் கொடுங்கள்! புடினை சீண்டும் ஜோபைடன் | Russia Give War Crimes Evidence To Icc Us Biden

அதிபர் விளாடிமிர் புட்டின் உக்ரேனிலிருந்து பிள்ளைகளைக் கடத்தியதாகச் சந்தேகிக்கப்படுவதுடன் அவ்வாறு செய்வது ஒரு போர்க்குற்றம். இந்த நிலையிலேயே ரஷ்யாவின் போர்க்குற்ற ஆதாரங்களை ICC இடம் கொடுக்குமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மேற்படி உத்தரவை வழங்கியுள்ளார்.