ஆஸ்திரேலியாவில் தமிழ் சட்டத்தரணி சங்கர் சந்திரனுக்கு விருது!

0
219

அவுஸ்திரேலிய வாழ் தமிழ் சட்டத்தரணியான சங்கரி சந்திரன் 60,000 டொலர் மதிப்புள்ள மைல்ஸ் பிராங்க்ளின் இலக்கிய விருதை வென்றுள்ளார்.

‘சாய் டைம் அட் சினமன் கார்டன்ஸ்’ (‘Chai Time at Cinnamon Gardens’) நாவலுக்காக விருதை அவர் வென்றுள்ளார். நேற்றைய தினம் (25-07-2023) சிட்னியில் உள்ள தி ஓவோலோ விருந்தகத்தில் இந்த விருது அறிவிக்கப்பட்டது.

அவுஸ்திரேலிய எழுத்தாளர்களிடையே அங்கீகாரம் பெறுவது அசாதாரணமானது. இந்த நிலையில் ‘மைல்ஸ் ஃபிராங்க்ளின் இலக்கிய விருதை வென்றது மிகவும் பெருமையாக இருக்கிறது.

எனவே இன்னும் தாம் அதிர்ச்சியில் இருப்பதாக தமிழ் சட்டத்தரணி சங்கரி சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு யுத்தத்திலிருந்து தப்பிப்பதற்காக 80களில் நாட்டை விட்டு வெளியேறிய இலங்கையைச் சேர்ந்த ஒருவரால் நடத்தப்படும் முதியோர் பராமரிப்பு நிலையத்தில் வசிப்பவர்களின் வாழ்க்கையை இந்த நாவல் எடுத்துக்காட்டுகிறது.

மேலும் இது போர், இனப்படுகொலை, இனவெறி, குடும்பம், காதல் மற்றும் நட்பு போன்ற கருப்பொருள்களை இந்த நாவல் ஆராய்கிறது.

நிகழ்வின் போது சந்திரனின் நாவலைப் பாராட்டிய நடுவர்கள் இந்த நாவல் சர்ச்சைக்குரிய வரலாற்றுக் கூற்றுகளை கவனமாகப் பின்பற்றுகிறது.

மறக்கப்பட்ட பயங்கரங்கள் மீண்டும் மீண்டும் நிகழும் கொடூரங்கள் என்பதை நினைவூட்டுகிறது என்று தெரிவித்துள்ளனர்.

சந்திரனின் பெற்றோர், இருவரும் மருத்துவர்களாக பணிபுரிந்தனர். நாடு உள்நாட்டுப் யுத்தத்தின் விளிம்பில் இருந்தமையால் இலங்கையை விட்டு வெளியேறினர்.

இந்த நிலையில் பிரித்தானியாவுக்கு சென்று பின்னர் அவுஸ்திரேலியாவில் குடியேறினர்.