செய்திகளை உருவாக்கும் வித்தியாசமான தொழில்நுட்பம்: கூகுளின் மற்றொரு புதிய முயற்சி

0
272

கூகுள் நிறுவனம் ‘ஜெனிசிஸ்’(Genesis) எனும் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட புதியதொரு அம்சத்தை வடிவமைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தொழில்நுட்பமானது நடப்பு நிகழ்வுகள் மற்றும் அது தொடர்புடைய தகவல்களை திரட்டி செய்திக் கட்டுரைகளாக உருவாக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது என கூகுள் தெரிவித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவில் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் இத்தகையச் சூழலில் செய்தி எழுதும் திறன் படைத்த ஜெனிசிஸ் (Genesis) குறித்து தகவல் வெளிவந்துள்ளமை வியத்தகு விடயமாக பார்க்கப்படுகின்றது.

எளிமையாகும் செய்தி எழுதும் பணி

தற்போது வரை வடிவமைப்பு கட்டத்தில் உள்ள நிலையில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை கூகுள் இன்னும் வெளியிடவில்லை.

செய்தி எழுத செய்தியாளர்களுக்கு உதவுவது தான் இதன் பிரதான பணி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் செய்தி எழுதும் பணி எளிமையாகும் என சொல்லப்படுகிறது.

தற்போது சிறிய அளவில் இயங்கி வரும் இந்த அம்சம் சில செய்தி நிறுவனங்களுடன் இணைந்து சோதனை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.