கொத்து குண்டுகளை குவித்து வைத்திருக்கிறோம்; மிரட்டல் விடுத்த புடின்

0
192

உக்ரைன் நாட்டுக்கு கொத்து குண்டுகளை அமெரிக்கா வழங்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தங்களிடம் தேவைக்கும் அதிகமான எண்ணிக்கையில் cluster குண்டுகள் இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் முடிவுக்கு எதிர்ப்பு

விவாதத்துக்குரிய ஆயுதங்களை உக்ரைன் பயன்படுத்தும் என்றால், அதற்கான பதிலடியை வழங்க ரஷ்யாவுக்கும் உரிமை இருக்கிறது என புடின் எச்சரித்துள்ளார்.

கொத்து குண்டுகளை குவித்து வைத்திருக்கிறோம்: வெளிப்படையாக மிரட்டல் விடுத்த புடின் | Russia Sufficient Stockpile Of Cluster Bombs

உக்ரைன் மீதான படையெடுப்பில் இதுவரை தாங்கள் cluster குண்டுகளை பயன்படுத்தியதில்லை என குறிப்பிட்டுள்ள புடின், உக்ரைனுக்கு cluster குண்டுகளை வழங்கும் அமெரிக்காவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஆனால், உக்ரைன் மீது ரஷ்யா cluster குண்டுகளை பயன்படுத்தியுள்ளதன் ஆதாரங்கள் சிக்கியுள்ளதுடன், அது ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

உக்ரைனுக்கு கொத்து குண்டுகள் 

இருப்பினும், cluster குண்டுகளை பயன்படுத்தவில்லை எனவும், அதன் தேவை இருக்காது என்றே நம்புவதாகவும் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். இதனிடையே, அமெரிக்கா வழங்கிய கொத்து குண்டுகள் உக்ரைனுக்கு வந்துள்ளதாக பென்டகன் வியாழக்கிழமை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.