வடகொரியாவின் மிரட்டலுக்கு பதிலடி: 3 நாடுகள் கூட்டாக ஏவுகணை சோதனை!

0
186

அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இதேவேளை அமெரிக்காவின் எச்சரிக்கைகளை மீறி வட கொரியா தொடர் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

சமீபத்தில் தங்களது வான்வெளிக்குள் அமெரிக்க உளவு விமானம் அத்துமீறி நுழைந்ததாக குற்றம் சாட்டிய வடகொரிய அரசாங்கம், தங்கள் வான் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் அமெரிக்க உளவு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படும் என எச்சரிக்கை விடுத்தது.

வட கொரியாவின் மிரட்டலுக்கு பதிலடி: 3 நாடுகள் இணைந்து ஏவுகணை சோதனை! | America South Korea Japan Jointly Test Missile

இவ்வாறான நிலையில் வட கொரியாவின் மிரட்டல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து கூட்டு கடற்படை ஏவுகணை பாதுகாப்பு ஒத்திகையை நடத்தின.

தென் கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையேயான சர்வதேச கடற்பரப்பில் இந்த முத்தரப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

வட கொரியாவின் மிரட்டலுக்கு பதிலடி: 3 நாடுகள் இணைந்து ஏவுகணை சோதனை! | America South Korea Japan Jointly Test Missile

இது தொடர்பாக தென்கொரியா கடற்படை அதிகாரி ஒருவர் கூறும்போது,

“வட கொரியாவின் அணு மற்றும் ஏவுகணை அச்சுறுத்தல்களுக்கு எங்கள் ராணுவத்தின் வலுவான பதில் அமைப்பு மற்றும் முத்தரப்பு ஒத்துழைப்புடன் திறம்பட பதிலளிப்போம்” என்று தெரிவித்தார்.