ஆஸ்திரேலிய கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு: கடற்கன்னியா அது?

0
228

அவுஸ்திரேலிய கடற்பகுதியில் கடற்கன்னி உருவத்தை ஒத்தான எலும்புக் கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவுதிரேலியா – குயின்ஸ்லேன்ட் பகுதியில் உள்ள கேப்பல் சான்ட்ஸ் என்ற கடற்பகுதியில் குறித்த எலும்புக்கூடு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த கடற்பகுதியில் மனித முகமும், மீன் உடலையும் போன்று அந்த எலும்புக்கூடு இருந்துள்ளது. அந்த பகுதியில் சுற்றுலா சென்ற போபி லீ என்ற 34 வயது பெண் இதை பார்த்து புகைப்படம் எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

கடற்கரை ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்: கடற்கன்னியா அது? | Australia Beach Discovered Mermaid Figure Tourists

இந்த புகைப்படங்கள் சர்வதேச அளவில் பகிரப்பட்டு வருவதுடன் கடற்கன்னி தொடர்பான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகளாவிய ரீதியாக கடற்கன்னி தொடர்பான ஊகங்கள் தொடர்ந்து இருந்த வண்ணமே உள்ளது.  

கடற்கன்னி தொடர்பான பல தகவல்கள் அவ்வப்போது வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் அவுஸ்திரேலிய கடற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த எலும்புக்கூடு கடற்கன்னி தொடர்பான பேச்சை மீண்டும் உயிரூட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

கடற்கரை ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்: கடற்கன்னியா அது? | Australia Beach Discovered Mermaid Figure Tourists