இன்று 99 சதவிதம் பேருக்கு செல்போன் இல்லாமல் அன்றைய நாளே ஓடாது, காலையில் எழுந்தது முதல் இரவு தூக்கம் வரை கூடவே இருப்பது செல்போன் தான்.
ஆனால் உங்களுக்கே தெரியாமல் உங்களது ஸ்மார்ட்போனை பழுதாக்கி கொண்டிருக்கிறீர்கள் என்றால் நம்ப முடிகிறதா?
ஆம் உண்மை தான், ஸ்மார்ட்போனிலே மூழ்கி கிடக்கும் நீங்கள் அதை முறையாக பராமரிக்காவிட்டால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
உங்களது போனை அடிக்கடி Restart செய்வதால் மட்டுமே பல பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்.
ஏனெனில் ஸ்மார்ட்போன் தான் உலகமே என்றாகிவிட்டது, இருந்த இடத்தில் இருந்தே பணம் செலுத்துதல், உணவை ஆர்டர் செய்தல், உலகில் நடக்கும் முக்கியமான விடயங்கள், பொழுதுபோக்கு என A-Z அனைத்திற்குமே அடித்தளம் போன் தான்.
அப்படியானால் போனை நீங்கள் எவ்வளவு பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும், முறையான பராமரிப்பு இல்லாத பட்சத்தில் செயல்திறன் குறைந்து புதிய போன் வாங்கும் நிலைக்கும் தான் ஆளாகலாம்.

எனவே தான் வாரத்திற்கு குறைந்தது ஒருமுறையாவது உங்களது போனை Restart செய்தால் பல ஆயிரக்கணக்கில் சேமித்து வைக்கலாம்.
ஸ்மார்ட்போன் மட்டுமின்றி கணனி, மடிக்கணனி என எதுவாக இருந்தாலும் Restart செய்வது நல்லதே.
இதனால் உங்கள் போனில் தேவையில்லாமல் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் தகவல்கள் அழிந்து போகும்.

Network, Memory Management, Battery Optimization போன்றவையும் சிறப்பாக இயங்கும்.
மிக முக்கியமாக மிக மோசமான ஹார்டுவேர் தொடர்பான பிரச்சனைகளும் சரியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.