பிரான்சின் ‘கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லீஜியன் ஆஃப் ஹானர்’ விருதை பெற்றார் மோடி

0
181

பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லீஜியன் ஆஃப் ஹானர்’ விருதை இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கினார் அதிபர் இமானுவேல் மேக்ரோங்.

பிரான்ஸ் அதிபர் மேக்ரோனுக்கு இந்திய மக்கள் சார்பில் பிரதமர் மோடி நன்றிகளையும் தெரிவித்தார்.

விருது வழங்கும் விழா எலிசி அரண்மனையில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது. அங்கு பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட விருந்துக்கு மக்ரோன் விருந்தளித்தார்.

கடந்த காலத்தில், கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லெஜியன் ஆஃப் ஹானர் உலகம் முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் புகழ்பெற்ற பிரபலங்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா, அப்போதைய வேல்ஸ் இளவரசர் சார்லஸ், முன்னாள் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் பூட்ரோஸ் பூட்ரோஸ்-காலி ஆகியோர் இந்த விருதை பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.