நவகமுவ பிரதேசத்தில் அண்மையில் பரபரப்பை ஏற்படுத்திய தேரருடன் சிக்கிய பெண்களின் ஆடைகளை களைந்த வீடியோ பதிவு செய்தமைக்கு பெண் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், தேரரின் ஒழுங்குப் பிரச்சினைகளை தனித்தனியாகக் கையாளலாம். ஆனால் பெண்களை நிர்வாணமாக்கித் தாக்கிய விதம் வெறுக்கத்தக்கது என்றார்.
குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
அத்துடன் அதைச் செய்ய எந்த நபருக்கும் உரிமை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதன்படி குற்றவாளிகளுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நவகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேல் போமிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரை ஒன்றில் இடம்பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் தொடர்பில் 08 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், குறித்த சம்பவத்தால் பெரும் சர்ச்சைகள் வெடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.