கின்னஸில் இடம் பிடித்த குடும்பம்; எதனால் தெரியுமா?

0
208

பாகிஸ்தானைச் சேர்ந்த குடும்பமொன்று ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. அதாவது அக்குடும்பத்தில் உள்ள 9 பேருமே ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி பிறந்துள்ளனர்.

பாகிஸ்தானின் லர்கானா பகுதியைச் சேர்ந்தவர் அமீர் அலி. இவரது மனைவி குதேஜா. இவர்களுக்கு 19 முதல் 30 வயதுடைய 7 குழந்தைகள் உள்ளனர். இதில் பெண் இரட்டையர்களும், ஆண் இரட்டையர்களும் அடங்குவர்.

9 பேருமே ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி பிறந்தவர்கள்

இவர்கள் 9 பேருமே ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி அன்று பிறந்துள்ளனர். இந்நிலையில் இது தற்பொது உலக சாதனையாக மாறி இருப்பதாக கின்னஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

இதற்கு முன்பு அமெரிக்காவில் கம்மின்ஸ் என்பவரது குடும்பத்தைச் சேர்ந்த 5 குழந்தைகள் இச்சாதனையைப் படைத்திருந்தனர். அவர்கள் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி அன்று பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது அச்சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. அமீர் அலி- குதேஜாவின் திருமண நாளும் ஓகஸ்ட் 1 என்பது கூடுதல் சிறப்பாகும். இந்நிலையில் இது கடவுளின் பரிசு என அத்தம்பதியினர் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.