விஜய் மகனுக்கு ஜோடியாகும் தேவயானி மகள்!

0
622

நடிகை தேவயானியின் மகள் சினிமாவில் களமிறங்கவுள்ளார்.

இனியா

90 களில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. இயக்குநர் ராஜகுமாரனை 2001ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு இனியா, பிரியங்கா என்ற இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், இயக்குநர் ராஜகுமாரன் மூத்த மகள் இனியா விரைவில் சினிமாவிற்கு ஹீரோயின் ஆக என்ட்ரி கொடுக்கப் போகிறார்.

சினிமா என்ட்ரி

அதுவும் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் உடன்தான் இணைந்து நடிப்பார் என தனது ஆசையை தெரிவித்துள்ளார். விஜய் மகன் சஞ்சய் படங்களை இயக்குவது குறித்து வெளிநாட்டில் படித்துள்ளார்.

குறும்படங்களை இயக்கி வருகிறார். தற்போது இயக்குனர்கள் சிலர் அவரை அனுகியதில் நடிக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.