பாரிசில் பெரும் வன்முறை – வாகனங்களுக்கு தீவைப்பு

0
298

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இதன்போது காரின் சாரதி இருக்கையில் இருந்த 17 வயது இளைஞர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரின் சாரதியை நோக்கி பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து பாரிஸில் பொலிஸாருக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தின் போது வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டு கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு நடந்தபோது காரில் மேலும் இருவர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டின் போது ஒருவர் தப்பி ஓடியதாகவும் மற்றைய நபர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.