நாம் ஒவ்வொரு நாளையும் ஆரோக்கியமான நாளாக மாற்ற காலை உணவு மிக முக்கியமானதாகும். அதிலும் ஒரு சிலர் உடல் எடையைக் குறைக்கும் நோக்கிலும் சரியான நேரமின்மையாலும் இன்று பலர் காலை உணவைத் தவிர்த்து வருகிறார்கள் இதனால் பல விளைவுகள் ஏற்படும் என்பது நாம் அறிந்ததே.
அப்படி நாம் காலையில் சாப்பிடும் உணவுகள் தான் அந்த நாளை புத்துணர்ச்சியாக வைத்திருக்கிறது. அப்படி காலையில் சில உணவுகளை சாப்பிட்டால் ஏற்படும் விளைவுகள் பற்றி அறிந்ததுண்டா?
காலையில் சாப்பிடக் கூடாத உணவுகள்
- தயிரை காலையில் சாப்பிட்டால் சளி் ஏற்பட ஆரம்பிக்கும் இதனால் காலையில் தயிர் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
- காலையில் குளிர்த நீரை குடித்தால் உடலில் வெப்பம் மற்றும் ஆற்றல் அளவை பாதிக்கும்.
- வறுத்த உணவுகளை காலையில் சாப்பிட்டால் அதில் இருக்கும் எண்ணெய் நாள் முழுவதும் செரிமானத்தை மெதுவாக வைத்திருக்கும்.
- சமைக்கப்படாத பச்சை உணவுகளை காலையில் சாப்பிட்டால் அது ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும்.
- சக்கரை பானங்கள் அல்லது சக்கரை உணவுகளை காலையில் எடுத்துக் கொண்டால் உடலில் சக்கரை அதிகரிப்பதற்கான முக்கிய காரணமாக மாறும்.
- பதப்படுத்தப்பட்ட உணவுகளை காலையில் சாப்பிட்டால் தொற்று நோய் மற்றும் இதய நோய் என்பவற்றை ஏற்படுத்தும்.
- காலையில் அதிக கொண்ட பழச்சாறுகளை எடுத்துக் கொள்வதால் வயிற்றின் செரிமான நொதிகளை கொல்லுகிறது.
- சுத்திகரிக்கப்பட்ட மாவில் அதிக ஊட்டச்சத்து மதிப்புகள் இல்லை என்றாலும் அதிக கலோரிகள் இருக்கிறது.
- காரமான உணவுகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அது வலியை ஏற்படுத்தி அமிலத்தன்மை அளவை பாதிக்கும்.
- காலையில் ஊக்கப்பானங்களை குடிப்பதால் அது தற்காலிய எழுச்சியைக் கொடுக்கிறது. அதில் இருக்கும் சக்கரை தீங்கு விளைவிக்க கூடியது.