ஈழத்தமிழர் பிரதிநிதிகளை அழைத்த அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபை

0
175

எந்த நாடும் தமது தேவைக்காக அல்லது செல்வாக்குக்காக அரசியல் அணுகுமுறையை செய்யும் போது அதில் பாதுகாப்பு, உளவுத்துறை உள்ளிட்ட பல துறைகள் அங்கம் வகிக்கும் என உலகத் தமிழர் பேரவை பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில்,

இலங்கையில் இருக்கும் பொருளாதார நிலைகுலைவு அதனால் வந்த அரசியல் நிலைகுலைவுகளை அமெரிக்க எப்படி தமக்கு சாதகமாக அணுகுவது என்று முதலில் இருந்து கட்டமைக்கின்றது.

அதற்கு பலதரப்பட்டவர்களின் கருத்துக்களை கேட்டு இலங்கையை எப்படி அணுகுவது என்பதில் அமெரிக்கா கவனம் செலுத்துகின்றது.

இதனடிப்படையில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பின் சில முக்கிய உறுப்பினர்களுடன் சி.ஐ.ஏ உளவுத்துறை தலைவரும் ஜனவரியில் இலங்கை சென்று இரண்டு நாள் தங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.