போலி இரத்தினக் கற்களைக் காட்டி தங்கம் கொள்ளையடிப்பு

0
187

நாடு முழுவதும் போலி இரத்தினக் கற்களைக் காட்டி மக்களை ஏமாற்றி அதற்குப் பதிலாக தங்கத்தை பரிமாறிக்கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த மோசடி தொடர்பில் மூவர் அடங்கிய குழுவின் பிரதான சந்தேகநபரை கைது செய்துள்ளதாக களுத்துறை தெற்குப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மெட்டியகொட – நிந்தன பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல் | Sri Lanka Gold Robbery Gold Price Today

போலி இரத்தினக் கற்கள்

சந்தேகநபர் மேலும் இருவருடன் இணைந்து போலி இரத்தினக் கற்களை வழங்கி அதற்கு பதிலாக பெறுமதியான தங்கப் பொருட்களை பெற்றுக்கொண்டதாக காலி மற்றும் களுத்துறையில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இலங்கையில் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல் | Sri Lanka Gold Robbery Gold Price Today

ஏனைய 2 சந்தேகநபர்கள் இருவரையும் தேடி விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இவ்வாறான மோசடியாளர்களிடம் சிக்கி தங்கத்தை இழக்க வேண்டாம் என பொலிஸ் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.