புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ள கூகுள் மேப்ஸ்

0
226

உலகளவில் பெருமளவிளான மக்களால் பயன்படுத்தப்படும் இணையவழி வரிப்படமாக கூகுள் மெப்ஸ் இருந்து வருகிறது.

இந்த வகையில் தற்போது கூகுள் நிறுவனமானது பயனர்களின் தேவைகளை கருத்திற்கொண்டு பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

அந்தவகையில் முதலாவதாக,  பொதுவாக மெப் செயலியை பயன்படுத்தும் பயனர்கள் பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய தேவை உள்ளது.

இதனைகருத்திற்கொண்டு தற்போது வரைப்படத்தை சேமித்து வைத்து இணையவசதி இல்லாத சந்தர்ப்பத்தில் இதை மீள் உபயோகம் செய்யும் வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ள கூகுள் மெப்ஸ் | Google Map New Features Tamil News

நிகழ்நிலை தகவல்

மேலும் தொலைபேசி சேமிப்பில் பற்றாக்குறை ஏற்படும் சந்தர்ப்பத்தில் சேமிக்கப்பட்டிருக்கும் வரைப்படத்தை அகற்றிகொள்ளவும் முடியும்.

அடுத்ததாக வீதியில் வாகன நெரிசலை கருத்திற்கொண்டு வேறு பாதையை பரிந்துரை செய்வதோடு அந்தந்த வாகனங்களுக்கு ஏற்றவிதமான பாதையையும் பரிந்துரை செய்யும்.

இதேவேளை ஒரு குறித்த பிரதேசத்தில் வாகன நெரிசல் தொடர்பாக நிகழ்நிலை தகவல்களை(Real time updates) வழங்கும் அம்சமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் கட்டணச்சாலைகள், தடைசெய்யப்பட்ட சாலை மற்றும் குறிப்பிட்ட வாகனங்களுக்கு மட்டும் தடை செய்யப்பட்ட சாலை தொடர்பான விடயங்களையும் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ள கூகுள் மெப்ஸ் | Google Map New Features Tamil News

எச்சரிக்கை சமிக்ஞை 

வேகத்தை அளவிடும் காட்டியாகவும் இது தொழிற்படுகிறது. உதாரணமாக ஒரு குறித்த வீதியில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் செல்லும்போது எச்சரிக்கை சமிக்ஞை தெரிவிக்கும்.

இருதியாக வரைப்படத்தை மற்றோரு நபருக்கு பகிரும்போது புறப்பட்ட நேரம் வந்தடையும் நேரம் தொலைபேசியின் (battery percentage) உட்பட்ட அனைத்தும் பகிரப்படும். இந்த அம்சம் பாதுகாப்பு நோக்கத்தை உறுதி செய்வதாக அமைந்துள்ளது