சிங்களவர்கள் இந்தியாவில் இருந்தே வந்தவர்கள் – மனோ பகிரங்கம்

0
189

நாம் இலங்கையர்கள், நாம் இந்திய பிரஜைகள் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் இன்றைய தினம் இடம்பெற்ற மலையக மக்களின் காணியுரிமை நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், அப்படிப்பார்க்கும் போது சிங்களவர்களும் இந்தியாவிலிருந்து தான் வந்தார்கள். ஆனால் அது பிரச்சினை இல்லை.

இப்பொழுது நாம் இலங்கையர்கள். அதனால் நாம் கைகோர்த்து செயற்பட்டு காணியுரிமையை பெற்றுக் கொண்டு நாட்டை கட்டியெழுப்புவோம்.

நாம் முழுமையான பிரஜாவுரிமையை பெற்றுக் கொள்ள காணியுரிமை தேவை என சுட்டிக்காட்டியுள்ளார். 

இதேவேளை காணி தினத்தை முன்னிட்டு ஹட்டனில் பாரிய ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்று நடைபெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

https://www.facebook.com/watch/?v=243455521736901

தொடர்புடைய செய்தி: