பட்டம் பெறும்போது நடனமாடியது ஒரு குற்றமா? மாணவிக்கு நேர்ந்த கொடுமை!

0
203

பட்டமளிக்கும் விழாவில் ஒரு மாணவி நடனம் ஆடியதால் அவரது பள்ளி முதல்வர் செய்த காரியம் தற்பொழுது வைரலாகி வருகிறது.

பட்டமளிப்பு விழா

அமெரிக்காவில் உள்ள பிலேடெல்பியா பெண்கள் மேல்நிலை பள்ளியில் கடந்த ஜூன் 9-ம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் மாணவிகள் மற்றும் அவரது பெற்றோர்கள் கலந்துக் கொண்டனர்.

அந்த சமயத்தில் எந்த கூச்சலோ, சத்தமோ இருக்கக் கூடாது என பள்ளி நிர்வாகத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. அப்பொழுது ஹஃப்ஸா அப்துல் ரஹ்மான் என்ற மாணவியின் பெயர் அறிவிக்கப்பட்டபோது, மகிழ்ச்சியை அடக்க முடியாமல் தன் பெற்றோரை நோக்கி கை அசைத்து முத்தமிட்டதோடு, நடனம் ஆடிபள்ளி முதல்வரிடம் சான்றிதழ் பெற அருகில் சென்றார்.

வைரலாகு வீடியோ

இந்நிலையில், அந்த பள்ளி முதல்வர் அவருக்கு பட்டத்தை கொடுக்காமல் அருகில் இருந்த கூடையில் போட்டுவிட்டார். இதில் அவர் அறிவிப்பை மீறி ஆடியதால் அங்கிருந்து வெளியேறுமாறு கூறியுள்ளார்.

girl-danced-in-her-graduation-ceremony

இதனால் சோகமடைந்த மாணவி அங்கிருந்து சென்றார், இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதில் பலர் இதற்கு 4 வருடம் கஷ்டப்பட்டு பெற்ற பட்டத்தை அளிக்காமல் இவ்வாறு செய்தது தவறு என்று கூறி கருத்து தெரிவித்து வருகின்றனர்.