10 நிமிடத்தில் தயாராகும் கார சட்னி…

0
152

வெறும் தக்காளி, வெங்காயத்தை மட்டும் வைத்து கார சட்னி செய்வது எப்படி என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

 • வெங்காயம் – 3 நறுக்கியது.
 • பூண்டு – 2 பற்கள்.
 • தக்காளி – 1 நறுக்கியது.
 • மிளகாய் – 12.
 • கல் உப்பு – 1 ஸ்பூன்.
 • புளி – நெல்லிக்காய் அளவு.
தக்காளி, வெங்காயம் போதும்- 10 நிமிடத்தில் தயாராகும் கார சட்னி | How To Make Kaara Chutny At Home Tamil
 • எண்ணெய் – 1 ஸ்பூன்.
 • கடலை பருப்பு – 1 ஸ்பூன்.
 • உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்.
 • கடுகு – 1/2 ஸ்பூன்.
 • சீரகம் – 1 ஸ்பூன்.
 • கறிவேப்பிலை – சிறிது.
 • பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன். 

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். 

பின் பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும், அடுத்து மிளகாய், கல் உப்பு மற்றும் புளி சேர்த்து வதக்கவும்.

சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக ஆறியுதும் அரைக்க வேண்டும்.

வேறொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம் சேர்த்து கலந்துவிடவும்.

இறுதியாக கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து அரைத்த சட்னியை சேர்த்து, அடுப்பில் இருந்து இறக்கினால் சுவைாயன கார சட்னி தயார்.