இந்தியா – இலங்கை பயணிகள் கப்பல் சேவை: அமைச்சர் கூறிய தகவல்கள்

0
194

இந்தியாவிற்கும் காங்கேசன் துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இந்த வருட இறுதிக்குள் ஆரம்பிப்பதற்கான சாத்திய கூறுகள் தற்பொழுது காணப்படவில்லை என விமானச் சேவைகள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிமால் சிறீபால டி சில்வா காங்கேசன்துறையில் வைத்துத் தெரிவித்துள்ளார்.

காங்கேசன்துறை ரேமினல் கப்பல்  சேவையை இன்றைய தினம் (16.06.2023) அமைச்சர் நிமால் சிறீபாலடி சில்வா வைபவ ரீதியாகத் திறந்து வைத்துள்ளார்.

இவ்விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்தியா - இலங்கைக்கான பயணிகள் கப்பல் சேவை தொடர்பில் அமைச்சர் கூறிய முக்கிய தகவல்(Photos) | India Sri Lanka Passenger Ferry Service

கப்பல் சேவை 

மேலு் அவர் கூறியுள்ளதாவது, தற்பொழுது காங்கேசன்துறையில் பயணிகள் ரேமினல் பல மில்லியன் ரூபா செலவில் புதிதாகக் கட்டப்பட்டுத் திறக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்தியா மற்றும் காங்கேசன் துறைமுகத்துக்கிடையிலான பயணிகள் கப்பல் சேவையினை ஆரம்பிப்பதற்குரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்தியா - இலங்கைக்கான பயணிகள் கப்பல் சேவை தொடர்பில் அமைச்சர் கூறிய முக்கிய தகவல்(Photos) | India Sri Lanka Passenger Ferry Service

அது எவ்வளவு காலத்தில் முடியும் என தற்பொழுது கூறமுடியாது. அது இந்த வருடக் கடைசியாக இருக்கலாம் அல்லது அடுத்த வருடமாக இருக்கலாம்.

ஆனால் வேலைகள் முடிவற்ற பின்னர் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

குறித்து நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் அரச அதிகாரிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.