ஊடகங்களை ஒடுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை: ஜனாதிபதி பகிரங்கம்

0
149

ஊடகங்களை ஒடுக்க வேண்டியத் தேவை தனக்கு இல்லை எனவும் ஊடகங்களினால் பாதிக்கப்படுவோருக்கு நிவாரணத்தைப் பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.  

இணையவழி மூலம் கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ளும் சேவை இன்று (16.06.2023) முதல் நாட்டில் நடைமுறைக்கு வந்துள்ளதை அடுத்து இதன் ஆரம்ப நிகழ்வு ஹோமாகம பிரதேச செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளதாவது,

கடவுச்சீட்டை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஊடகங்களை ஒடுக்க வேண்டிய தேவை தனக்கு இல்லை : ஜனாதிபதி பகிரங்கம் | Presidential Initiative To Issue Passports

அரச சேவை டிஜிட்டல் மயமாக்கப்படல்

அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் திட்டத்திற்கு அமைவாகவே கடவுச்சீட்டை இணையத்தின் ஊடாக விண்ணப்பிக்கும் இந்த புதிய முறை நடைமுறைக்கு வந்துள்ளது.

அதற்கிணங்க குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் www.immigration.gov.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசித்து கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்க முடியும்.

இதனைத் தொடர்ந்து அருகிலுள்ள பிரதேச செயலாளர் அலுவலகத்திற்குச் சென்று விரல் அடையாளம் பதித்த பின்னர் இணையம் மூலம் அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.

உரிய விண்ணப்ப படிவம்

மேலும், 50 பிரதேச செயலகங்களில் கைவிரல் அடையாளம் பெறும் இயந்திரங்கள் உட்பட தேவையான உபகரணங்களை ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள நிலையில் தபால் திணைக்களம் இந்த நடவடிக்கைகளுக்காக புதிய தபால் சேவையையும் அறிமுகப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிய விண்ணப்பம் விண்ணப்பதாரருக்கு அனுப்பிவைக்கப்பட்டு அதனை பூர்த்தி செய்து மென் பிரதியை பதிவேற்றம் செய்த பின்னர் கடவுச்சீட்டை 3 நாட்களிலா அல்லது சாதாரண முறைப்படி 02 வாரங்களுக்குள்ளேயா பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ள ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் தொடர்பாக இந்த கருத்தினை வெளியிட்டிருந்தார்.